கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு !

0
194

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் (Anuradha Yahampath) மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) ஆகியோர் அப்பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு தனக்கு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி செயலகம்! | Governor Of The North Eastern Province Resign Post

நேற்று முன் தினம் (04-05-2023) தனக்கு அந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் தொலைபேசி ஊடாக அது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி செயலகம்! | Governor Of The North Eastern Province Resign Post

அவ்வாறான நிலையில் அத்மிரால் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கும், வட மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர் மட்டம் அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் வசந்த கரன்னாகொட தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டுள்ளது. அவர் மாகாண சபையை இராணுவ ஆட்சியாக மாற்றுவதாக இதன்போது பேசப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி செயலகம்! | Governor Of The North Eastern Province Resign Post

இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு அவருக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வசந்த கரன்னாகொடவுக்கு அமரிக்கா விதித்துள்ள தடையும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், அனுராதா யஹம்பத் இராஜினாமா செய்தால், கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை நியமிக்க அரசாங்க உயர் மட்டம் பேசி வருவதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும் குறித்த ஆளுநர் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சி மூத்த உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை வட மாகாணத்துக்கு ஆளுநராக நியமிப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.