விளாடிமிர் புடின் மீது ட்ரோன் விமானத்தால் தாக்குதல்: படுகொலை முயற்சி என ரஷ்யா

0
106

ட்ரோன் விமானம் மூலமாக விளாடிமிர் புடினை உக்ரைன் கொல்ல முயற்சிப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

விளாடிமிர் புடின் மாளிகை மீது

குறித்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எனவும், தகுந்த பதிலடி உறுதி எனவும் ரஷ்யா சூளுரைத்துள்ளது. விளாடிமிர் புடின் மாளிகை மீது ட்ரோன் விமானங்கள் குறிவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் போர் முன்னெடுக்கப்பட்டு வருவதால், நள்ளிரவு 2.30 மணிக்கும் புடின் கண்காணிப்பில் இருப்பார் என்றே கூறுகின்றனர். இதனிடையே, ஜனாதிபதி மாளிகையை குறிவைத்த ட்ரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது உக்ரைன் தரப்பால் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல் என ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது புடின் ஜனாதிபதி மாளிகையில் இல்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மே 9ம் திகதி மாஸ்கோவில் திட்டமிடப்பட்டுள்ள வெற்றி தின அணிவகுப்பு இந்த சம்பவம் நடந்த போதிலும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.