தென் சீனக் கடலில் வலுக்கும் முறுகல் நிலை; சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

0
308

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வார இறுதியில் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் படகு சீன கடலோரக் காவல்படையின் கப்பலுடன் மோதியதை அடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென் சீனக்கடல்

தென் சீனக்கடல் பகுதி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக சீனா கூறினாலும், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை உண்டு என்று கூறி அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இரண்டு கப்பல்களும் மோதிக்கொண்டது, பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டல் என்று சீனா கூறியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பிலிப்பைன்ஸ் மறுத்துள்ளது.

தென் சீனக் கடலில் வலுக்கும் முறுகல் நிலை - சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா | Demands Of The United States To China

பிலிப்பைன்ஸ் தனது பிராந்திய கடற்பகுதியில் பயணம் செய்வது ஆத்திரமூட்டும் செயல் அல்ல என்று கூறுகிறது. எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தென் சீன கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து காத்திரமான முடிவுகளை எடுக்கும் நெருக்கடியில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.