ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலைமுடியை வெட்டிய பாடசாலை; கோபமடைந்த பெற்றோர்

0
153

கனடா – ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை வெட்டிய சம்பவத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பாடசாலையில் 4ஆம் வகுப்பு மாணவனின் முடியையே வெட்டியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவனுக்கு பிடித்தமான ஒன்று அவனது தலை முடி எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், கடந்த 4ம் திகதி (04-04-2023) பாடசாலை நேரத்தில் தொடர்புடைய மாணவனின் தலை முடியில் ஒட்டக்கூடிய, சிவப்பு நிறப் பொருள் காணப்பட்டதாகவும், அதை நீக்க தலை முடியை கத்தரிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் பாடசாலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், பெற்றோருடன் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு முறையானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பாடசாலை அளித்த விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை எனவும், இனி அந்த பாடசாலையில் தமது மகனை அனுப்புவது பாதுகாப்பானதாக இருக்காது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையான சந்தர்ப்பங்களில் தமது மகன் ஒருமுறை கூட முடி கத்தரிக்கும் போது சகஜ நிலையில் இருந்ததில்லை எனவும், தங்களை அவன் எட்டித்தள்ளியிருப்பதையும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படியான சூழலில், பாடசாலை நிர்வாகம் அளித்துள்ள அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.