பிரேசிலில் கருப்பையை நீக்க சென்ற சம்பா நடனக் கலைஞர் பெண்ணொருவருக்கு அறுவைசிகிச்சை மூலம் இடது கை அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சம்பா நடனக் கலைஞர்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது சம்பா நடனக் கலைஞர் அலெசாண்ட்ரா டோஸ் சாண்டோஸ் சில்வா. இவர் கருப்பை நார்த்திசுக் கட்டிகளுக்கான ஆரம்ப அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கருப்பையில் ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் அவருக்கு முழு கருப்பை நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பின், அறுவை சிகிச்சையின் சிக்கல்களின் நசிவு காரணமாக, அலெசாண்ட்ராவின் கை கிட்டத்தட்ட முற்றிலும் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
இடது கை அகற்றம்
அத்துடன் அலெசாண்ட்ராவின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயலிழக்கத் தொடங்கியதால் அவற்றை காப்பாற்ற முயற்சித்த மருத்துவர்கள், அவரது இடது கையின் முழங்கைக்கு கீழே கையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி அலெசாண்ட்ரா மயக்கத்தில் இருந்து எழுந்தபோது, தனது கை அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் மார்ச் 4ஆம் திகதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலெசாண்ட்ரா ஒருமாத காலம் தங்கியிருந்து ஆரோக்கியமடைந்ததும் டிஸ்சார்ஜ் ஆனார்.
குற்றம்சாட்டிய பெண்
இந்த நிலையில் அலெசாண்ட்ரா, ‘இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பாளிகள் பணம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் என் வாழ்க்கையை முடித்துள்ளனர். என் வேலை, தொழில், கனவு என அனைத்தையும் அழித்துவிட்டார்கள்’ என குற்றம்சாட்டியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோ சுகாதாரத் துறை மற்றும் சிவில் காவல்துறை, பிழைகளின் பட்டியலை விசாரித்து வருகின்றன, மேலும் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலெசாண்ட்ரா மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப் போராடிய அவருடைய தோழிகளின் அயராத உதவியால் தான் அவர் உயிருடன் இருப்பதாக, அப்பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.