கனடாவில் சார்ள்ஸ் மன்னருக்கு எதிர்ப்பு

0
349

கனடாவைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் மன்னர் சார்ள்ஸை நாட்டின் தலைவராக ஏற்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“கடவுள் மன்னரை காப்பாற்றுவாராக” என்ற பாடலை பாடவும் மன்னரின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவும் கனடியர்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னரின் உருவப்படத்தை கனடிய நாணயத்தாள்களில் பொறிக்கப்படுவது போன்றவற்றை மக்கள் அங்கீகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனமொன்று அண்மையில் சுமார் இரண்டாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பினை நடாத்தியுள்ளது. கனடாவில் சார்லஸ் மன்னருக்கு எதிர்ப்பு?இரண்டாம் எலிசபத் மஹாராணி மீது மக்கள் மரியாதை கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்தளவு மரியாதை மன்னர் சார்ள்ஸிற்கு கிடையாது என கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

35 வயதுக்கும் குறைந்த கனடியர்கள் மன்னர் சார்ள்ஸை அங்கீகரிப்பதில் கூடுதல் நாட்டம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.