முடி அடர்த்தியாக வளர சுவையான சத்து லட்டு!

0
191

தங்களை அழுகுப்படுத்திக் கொள்ள ஆண்களை விட பெண்களே அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் முடி விடயத்தில் அதிகம் கவனம் கொள்வார்கள்.

கொஞ்சம் முடி கொட்டுவதைக் கட்டாலும் அடுத்த தீர்வை நோக்கி செல்வார்கள். அவ்வாறு முடி மீது அதிக கவனம் கொண்டவர்களுக்கு ஒரு தீர்வாக அமைவது தான் பயோட்டின் சத்து.

இந்த பயோட்டின் என்பது வைட்டமின் b7இந்த சத்து முடி வளர அதிகம் உதவும், முடியில் கெரட்டின் உற்பத்தியை தூண்டி அடர்த்தியாக வளர வைக்கிறது.

இந்த பயோட்டின் சத்து அதிகம் கொண்ட லட்டை தான் இன்று நாம் எப்படி செய்வதென்று பார்க்கப்போகின்றோம்.  

பயோட்டின் சத்து அதிகமுள்ள லட்டு

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு – 1/4 கப்

வால்நட் – 1/4 கப்

சூரியகாந்தி விதை – 1/4 கப்

முலாம்பழம் விதை – 1/4 கப்

பூசணி விதை – 1/4 கப்

ஆளி விதை – 1 மேசைக்கரண்டி

தேங்காய்துருவல் – 1/4 கப் 

பேரிச்சம்பழம் – 4

நாட்டு சர்க்கரை/வெல்லம் – 1/4 கப்

ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

பயோட்டின் சத்து அதிகமுள்ள லட்டு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாகியதும் பாதாம் பருப்பு, சூரிய காந்தி விதை, பூசணி விதை, ஆளி விதை முலாம்பழ விதை, வால்நட் போன்றவற்றை 5 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்தப் பொருட்களை எல்லாம் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைகுறையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு துருவிய தேய்காய், பேரீச்சம் பழம், நாட்டுச்சக்கரை, ஏலக்காய் (பொடியாக்கியது) என்பவற்றை சேர்த்து மீண்டுமொரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்தப்பிறகு அந்தக் பொடியை உங்கள் கையால் சிறிய சிறிய உருட்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் முடிக்கு சக்திக் கொடுக்கும் பயோட்டின் நிறைந்த லட்டு தயார்.