யாழ் நீதிமன்றில் குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

0
242

நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் இன்று இடம்பெற்றவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது.

பொலிஸார் மனு தாக்கல்

அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும், மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற அனுமதி கோரி யாழ்ப்பாண பொலிஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதனை அடுத்து நீதிமன்று குறித்த சிலை தொடர்பில் உரிமை கோர கூடியவர்கள் எவரேனும் இருப்பின் இன்று மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தது.

யாழ்.நீதிமன்றில் குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!(Photos) | Jaffa Police Gathered Court Caused Excitement

அதன் பிரகாரம் இன்றைய தினம் சிலை தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்றில் பிரசன்னமாகவுள்ளனர்.

யாழ்.நீதிமன்றில் குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!(Photos) | Jaffa Police Gathered Court Caused Excitement

அதேவேளை இந்து அமைப்புக்கள்  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மூத்த சட்டத்தரணிகளான என். ஸ்ரீகாந்தா , வி. திருக்குமரன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர். இந்நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெந்ரிவிக்கப்படுகின்றது.

யாழ்.நீதிமன்றில் குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!(Photos) | Jaffa Police Gathered Court Caused Excitement