இலங்கையில் இருந்து சீனாவிற்கு செல்லவுள்ள ஒரு லட்சம் குரங்குகள்! விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

0
227

இலங்கையில் உள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு ஒன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.

இலங்கையில் இருந்து சீனாவிற்கு செல்லவுள்ள ஒரு லட்சம் குரங்குகள்! | One Lakh Monkeys To Go From Sri Lanka To China

இந்தக் கோரிக்கையின் பிரகாரம் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (11-04-2023) பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கையில் இருந்து சீனாவிற்கு செல்லவுள்ள ஒரு லட்சம் குரங்குகள்! | One Lakh Monkeys To Go From Sri Lanka To China

இலங்கையில் கடந்த காலங்களில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சீனாவிற்கு செல்லவுள்ள ஒரு லட்சம் குரங்குகள்! | One Lakh Monkeys To Go From Sri Lanka To China

இந்த கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளைவெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.