யாழில் பழமை வாய்ந்த கோவிலில் மாயமான சிலைகள்!

0
280

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வவுனியா – வெடுக்குநாறி – ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலாலியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிலைகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் பலாலி காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என பலாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.