இதியாவில் இன்று ராம நவமியாகும் இதனையொட்டி பல கோவில்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலுள்ள பழமையான பாவ்டி என்ற கிணற்றின் கூரை சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பெலாஷ்வர் கோயிலில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ராம நவமியை முன்னிட்டு பெலாஷ்வர் மகாதேவ் கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபாட்டிற்காக கூடினர். அப்போது படிக்கட்டு கிணற்றின் கூரை மேல் நின்றிருந்த பக்தர்களின் கணம் காரணமாக கிணறு சரிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.