நான் திருடியதற்கு காரணம் ஐஸ்வர்யா தான்! ஈஸ்வரியால் அம்பலமாகிய ஐஸ்வர்யாவின் சுயரூபம்

0
133

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் அரங்கேறிய திருட்டில் சிக்கிய பெண் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சினிமா தயாரிப்பில் பிஸியாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அவரது நகை திருட்டு போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்ற பெண் திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் இருந்து 100 பவுன் நகைகள், 30 கிராம் வைரலம், கிலோ கணக்கில் வெள்ளிக் கட்டி இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரிடமிருந்து 95 லட்சத்திற்காக வீட்டு பத்திரத்தினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதாவது 95 லட்சத்திற்கு வீடு ஒன்றினையும் கட்டியுள்ளார்.

நான் திருடியதற்கு காரணம் ஐஸ்வர்யா தான்! ஈஸ்வரியால் அம்பலமாகிய ஐஸ்வர்யாவின் சுயரூபம் | Aishwarya Jewel Theft Case Maid Eshwari

வங்கியில் கடன் வாங்கி வீட்டைக் கட்டிய ஈஸ்வரி அதனை இரண்டே ஆண்டுகளில் திருப்பியும் கொடுத்துள்ளார். தொடர்ந்து பொலிசார் ஈஸ்வரியிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில் தன்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்… என்றும் ஐஸ்வர்யா வீட்டில் தான் மாடு போன்று உழைத்ததற்கு சரியான சம்பளம் வழங்கவில்லை… மாதம் வெறும் 30 ஆயிரம் மட்டுமே கொடுத்தார்கள்… அந்த பணம் எனக்கு போதவில்லை என்பதால் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருட ஆரம்பித்தேன்.

இதனை அவர்கள் கண்டுபிடிக்காததால், நாட்கள் செல்ல செல்ல அதிகமான நகைகளை எடுக்கும் எண்ணம் தனக்கு தோன்றியதாகவும், நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் எதற்காக திருட போகிறேன் என்றும் தன்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான் என்று ஈஸ்வரி பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.