எலோன் மஸ்க் மகளின் பெயர் மாற்றம்!

0
335

உலக பெரும் பணக்காரகளில் ஒருவரான இலோன் மஸ்கின் மகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலோன் மஸ்கிற்கும் அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் (Grimes) பிறந்த மகளின் பெயரே இவ்வாறு “Y” என மாற்றப்பட்டுள்ளது.

தாயாரான கிரைம்ஸ் தமது Twitter பக்கத்தில் பெயர் மாற்றத்துடன் மகளின் படத்தையும் அவர் பகிர்ந்தார்.

15 மாத அந்த குழந்தையின் முன்னாள் பெயர் Exa Dark Sideræl என்பதாகும். இந்நிலையில் மகளின் பெயரை வெறும் “?” எனக் கேள்விக் குறியாக மாற்ற விரும்பியதாக கிரைம்ஸ் கூறினார்.

இலோன் மஸ்கின் மகளின் பெயர் மாற்றம்! | Elon Musk S Daughter S Name Change

அரசாங்கம் அங்கீகரிக்காது 

எனினும் அரசாங்கம் அதை அங்கீகரிக்காது என்று அவர் சொன்னார். ஏன் “Y” அல்லது “Why?” என்பது “ஆர்வம் என்றும் அழியாக் கேள்வி” ஆகியவற்றை “Y” குறிப்பதாக கிரைம்ஸ் தெரிவித்தார்.

அதேவேளை கிரைம்ஸ் (Grimes) மகள் 2021 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் பிறந்ததாக Insider இணையவாசல் கூறியது. மேலும் இலோன் மஸ்கிற்கும் கிரைம்ஸுக்கும் 2020 ஆம் ஆண்டு பிறந்த மகனின் பெயர் X Æ A-Xii என்பதாகும்.