பகலில் நீதிபதியாகவும், இரவில் ஆபாச நடிகராகவும் மாறிய நபர்!

0
116

அமெரிக்காவைச் சேர்ந்த நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஒன்லி பேன்ஸ் என்ற சேனலில் ஆபாச நடிகராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார்.

தனது ஒன்லி பேன்ஸ் என்ர சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி ‘நான் ஒரு நீதிபதி’ என்றும் காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர் என கூறி உள்ளார்.

மேலும் கிரிகோரி தன் சுயசரிதையில் ‘முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ‘ என்று தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் நியூயார்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து நகர கவுன்சில் பெண் விக்கி பலடினோ கூறியதாவது:- இந்த நகரம் அனைத்து மட்டங்களிலும் அதன் நீதிமன்றங்களில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும்.

மேலும் லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளுக்கு நியமிப்பது நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கிறது என நகர கவுன்சில் பெண் விக்கி பலடினோ கூறினார்.