தங்கையின் திருமணத்திற்கு 8 கோடி வரதட்சணை; வியப்பில் ஆழ்த்திய சகோதரர்கள்!

0
282

சகோதரியின் திருமணத்திற்கு நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாயினை வரதட்சணையாக அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் சுமார் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து தங்களுடைய பாச தங்கை பன்வாரி தேவியின் திருமணத்தை நடத்தி அசத்தியுள்ளனர்.

அதன்படி அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்களே சகோதரியின் திருமணத்திற்காக இந்த பெரும் தொகையை செலுத்தியுள்ளனர்.

இதன்போது வரதட்சணை தொடர்பாக வெளியான தகவலின்படி சுமார் ரூ.2.21 கோடி ரொக்கம், 4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம் மற்றும் குதா பகவன்தாஸ் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 1 பிகா நிலம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தங்கையின் திருமணத்திற்கு சகோதரர்கள் 8 கோடியளவில் வரதட்சணை கொடுத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.