கணவரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த நடிகை; அதிர்ச்சி சம்பவம்

0
244

பிரபலமான சீரியலில் துணை நடிகையாக நடித்துவரும் ரம்யா தன் கணவரை நண்பர்களைக் கொண்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைதாகியிருக்கிறார்.

கணவரை கொலை செய்ய முயன்ற நடிகை

பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ரம்யா என்பவர் ‘சுந்தரி, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகின்றார்.

ரம்யா மற்றும் ரமேஷ் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாமல் இருப்பதால் குழந்தைகளையும் தனது தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு ரம்யாவிடம் கூறியிருக்கிறார் ரமேஷ்.

இந்நிலையில், சினிமா மீது உளடள ஆர்வத்தால் இது சரிபட்டு வராது என நினைத்த ரம்யா தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்றும் நண்பர் சந்திரசேகரனிடம் கூறியுள்ளார்.

இதன்படி நேற்று முன்தினம், இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தை கொண்டு சந்திரசேகர் அவர்கள் மீது மோதியுள்ளார்.

கணவரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த சீரியல் நடிகை

பின்னர், ரமேஷை தாக்கி அவரின் கையை உடைத்து, சந்திரசேகர் மறைத்து வைத்திருந்த பிலைட் மூலம் ரமேஷின் கை, கழுத்து, தலை பகுதிகளை தாக்கி விட்டு தப்பித்து இருக்கிறார்.

இவ்வாறு காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் பொலிஸார் மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில், ரம்யா மற்றும் சந்திரசேகரை கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.