யாழ் புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக தேவராஜா சர்மா சுரேந்திரன் எதிர்வரும் திங்கட்கிழமை (27.03.2023) முதல் பதவியேற்கவுள்ளார்.
இவர் இதுவரையில் கொழும்பு, மருதானை, கொட்டகலை, சீனன் குடா, திருகோணமலை, மட்டக்களப்பு, செட்டிக்குளம், மாங்குளம், சுண்ணாகம் முதலிய புகையிரத நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.
இவர் வடமாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரானவர் என்பது குறிப்படத்தக்கது.
