இருப்பா நானும் பீல்டிங் வாரேன்; மைதானத்தில் ஓடி அடம்பிடித்த நாய்.. வைரலாகும் வீடியோ

0
470

IND Vs AUS போட்டிக்கு நடுவே மைதானத்தில் நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியா ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் – இந்திய கிரிக்கெட் அணியும் மோதிய டி20 போட்டித்தொடரில் இந்தியா அபார வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகள் வீதம் பெற்றுள்ளன. இதனை இன்று நடைபெறும் மூன்றாவது இறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மைதானத்தில் நாய்

இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்த பரபரப்பான போட்டியின் போது இந்திய அணி பீல்டரிங் செய்துகொண்டு இருந்தபோது நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்து ஓடியது, இதானால் விளையாட்டு போட்டியில் சிறிது நேரம் தடைப்பட்டது .

பிறகு அந்த நாய் மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு ஆட்டம் தொட்ர்ந்தது. ஆனால் நெட்டிசன்கள் பீல்டிங் செய்ய நாய் வந்துவிட்டது என்று கலாய்த்து வருகின்றனர்.