இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி..

0
198

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 320.27 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 308.70 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேவேளை விற்பனை விலை 343 ரூபாவில் இருந்து 330 ரூபாவாக குறைந்துள்ளது. 

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 310 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 325 ரூபாவாக குறைவடைந்துள்ளது. 

இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் 314 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 311 ரூபாவாக குறைந்துள்ளது. 

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! வெளியான தகவல் | Dollar Rate Increased In Sri Lanka Money Exchange

அத்துடன் கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய தினம் 336 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 330 ரூபாவாக குறைந்துள்ளது.