திருக்கோணேச்சரம் கோவிலின் கீழுள்ள ஆழ்கடல் பகுதியில் சிறார்களின் செயல்

0
270

வெளிநாட்டு படையெடுப்புகளினால் பல வரலாற்று சின்னங்கள், கோவில்கள் அழிக்கப்ட்டுள்ளன. அதில் திருக்கோணேச்சரம் கோவிலும் ஒன்றாகும்.

இராவணன் தொடக்கம் பல தமிழ் மன்னர்களின் ஆட்சியின் அடையாளமாக விளங்கிய இத்தளத்தில் பல சிலைகள் திருடப்பட்டு, கடலுக்கு அடியிலும் வீசப்பட்டது. அதன் சிதைவுகள் பல வரலாறுகள் கடந்தும் ஆழ்கடலில் காணப்படுகிறது.

திருக்கோணேச்சரம் கோவிலின் கீழுள்ள ஆழ்கடல் பகுதியில் சிறார்களின் வியக்கும் செயல் (Photos) | Activity Sea Area Below Thirukonecharam Temple

இந்நிலையில் திருக்கோணேச்சரம் கோவிலிற்கு கீழுள்ள ஆழ்கடல் பகுதியில் மூன்று சிறார்கள் சுழியோடி கடலுக்கடியில் உள்ள கோவிலின் சிலைகள், சிதைவுகளை கண்டறிந்துள்ளனர்.

இதன்போது குறித்த சிறார்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் இதற்கு முன்னரும் பலர் இங்கு சுழியோடியமை குறிப்பிடத்தக்கது.

பலர் இம்முயற்சிகளுக்கு முன்வர வேண்டும்

இச் சிறு வயதில் சரியான பயிற்சி மூலம் இச்செயற்பாட்டினை செய்ததாகவும் இதேபோன்று பலர் இம்முயற்சிகளுக்கு முன்வர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோணேசர் கோவிலின் கீழ்ப்பகுதி கடலின் அதிகூடிய ஆழம் கடல் மட்டத்திலிருந்து 12இல் இருந்து 15 மீட்டர் ஆகும்.

இவ் ஆழம் வரை இச்சிறுவர்கள் சுழியோடியமை குறிப்பிடதக்கது.

இதேவேளை குறித்த சிறுவர்களின் சுழியோடும் செயற்பாடு நீச்சல், சுழியோடி பயிற்றுவிப்பாளர்களின் பாதுகாப்புடன் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.