இலங்கையில் Listeria நோயால் பெண் பலி!

0
235

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா Listeria (Listeriosis) நோயால் உயிரிழந்துள்ளார்.

சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த மாதம் 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப பரிசோதனை

இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையில் Listeria நோயால் பெண்ணொருவர் பலி! | A Woman Died Of Listeria In Sri Lanka

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும், வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, இது தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமையால், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

லிஸ்டிரியோசிஸ் என்றால் என்ன?

லிஸ்டிரியோசிஸ் Listeria (Listeriosis) என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜெனெஸினால் ஏற்படும் மிக கடுமையான பாக்டீரியல் தொற்று ஆகும். சில நேரங்களில், இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியவின் பெயரைக் காரணமாக கொண்டு இது ‘லிஸ்டீரியா’ எனவும் அழைக்கப்படுகிறது.

இலங்கையில் Listeria நோயால் பெண்ணொருவர் பலி! | A Woman Died Of Listeria In Sri Lanka

இந்த தொற்றுநோய் ஆரம்பத்தில் உணவினால் ஏற்படுகின்றது, ஆகையால், பாக்டீரியாக்கள் முதலில் குடலில் பாதிப்பேற்படுத்துகின்றன.

இது பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பினை கொண்ட தனிநபர்களை பாதிக்கின்றதாகவும்  கூறப்படுகின்றது.