யாழ்பாணம் – கொழும்பு விமான சேவை தொடர்பில் தகவல்; இந்தியத் துணைத்தூதுவர்

0
375

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ( Rakesh Nataraj Jayabaskaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காலசார மண்டபத்தில் இன்றைய தினம் (15-03-2023) யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்பாணம் - கொழும்பு விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்! | Jaffna Colombo Flight Service Explore Get Started

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்படும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம்.

யாழ்பாணம் - கொழும்பு விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்! | Jaffna Colombo Flight Service Explore Get Started

மேலும் யாழ் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

மேலும் யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றார்.