இலங்கைக்கு 300 கோடி டொலர் வழங்வுள்ள IMF!

0
227

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார உத்தரவாதம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் ருவன்வெல்லவில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு 300 கோடி டொலர் வழங்வுள்ள IMF! | Sri Lanka Has 300 Million Dollars From The Imf

மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையற்ற ரீதியாக ரூபாவின் பெறுமானத்தை பலப்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.

அதேவேளை டொலரின் பெறுமதி குறைந்து ரூபாவின் பெறுமதி பலமடைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைவதாகவும் டொலரின் பெறுமதி குறைவதால் வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணத்தின் தொகை குறைவடைவதாகவும் முன்வைக்கப்படும் கூற்றுக்களில் எதுவித உண்மையும் இல்லையெனவும்  அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய  வலியுறுத்தியுள்ளார்.