தடம்புரண்ட யாழ்தேவி; பாதைக்கு மாறும்போது நடந்த சம்பவம் !(Photos)

0
71

கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்தை பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக புத்தளம் பிரதான பாதை மற்றும் புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் தாமதாகும் நிலை ஏற்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மும்முனைப் பகுதியில் மூன்றாவது தண்டவாளத்தில்  யாழ்தேவி கடுகதி ரயில் சென்று கொண்டிருந்த இந்த ரயில், இரண்டாவது பாதைக்கு மாறச் செல்லும்போது தடம்புரண்டது.

பாதைக்கு மாறும்போது தடம்புரண்ட யாழ்தேவி !(Photos) | Yadhevi Derailed While Changing The Path

அலுவலக ஊழியர்கள்  பயணிகள் அவதி

இதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ரயில் பாதைகளின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

அதேவேளை ஒரே வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதால், பல அலுவலக ரயில்கள் தாமதமாகி, அலுவலக ஊழியர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.  

பாதைக்கு மாறும்போது தடம்புரண்ட யாழ்தேவி !(Photos) | Yadhevi Derailed While Changing The Path

இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தை வழமைக்கு கொண்டுவரும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.