மீண்டும் சட்டத்துக்குள் சிக்குவாரா வசந்த முதலிகே!

0
86

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் சட்டத்துக்குள் சிக்குவாரா வசந்த முதலிகே! | Chikwara Vasantha Mudalike Within The Law

இந்தநிலையில், போதிய சாட்சியங்கள் இன்மையால் வசந்த முதலிகேயை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்போது சட்டமா அதிபரினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.