நடுக் காட்டில் மீட்கப்பட்ட முன்னாள் போராளியின் நிலை!

0
308

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து    நேற்றையதினம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட முன்னாள் போராளி

மீட்கப்பட்டவர் கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட  முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் என தெரியவந்துள்ளது.

கைவிடப்பட்ட முன்னாள் போராளி தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

 அவர் தொடர்பில் தகவலறிந்த சிலர் , அவரை  சந்திக்க காட்டுக்கு சென்றபோதும் இவர்களைக் கண்டதும் பாலா காட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார்.

இதன் காரணமாக  அவரை தேடிச்சென்றவர்கள்  அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.

இதைனையடுத்து  அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்  முன்னாள் போராளி இருந்த  காட்டுப்பகுதிக்கு அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு சிகிச்கைகளுக்காக  அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல்  அவர் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில் ,  இச்சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

video source from Lankasri