ஆப்கானில் பிரிந்த தம்பதிகளை கட்டாயம் சேர்க்க புதிய சட்டம்!

0
204

ஆப்கான் நாட்டில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்த பெண்களை மீண்டும் அதே கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தாலிபான்கள் கொண்டுவந்த புதிய சட்டத்தால் அந்நாட்டில் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை விதிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். முதலில் பெண்கள் உயர் கல்வி பெற கூடாது, ஓட்டுனர் உரிமம் வாங்க கூடாது, உடலை முழுவதும் மூடிக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும், கருத்தடை ரத்து, மேலும் கணவர் துணையின்றி பெண்கள் தனியாக செல்ல கூடாது என பல திட்டங்களை போட்டனர்.

நாடொன்றில் பிரிந்த ஜோடிகளை மீண்டும் கட்டாயப்படுத்தி சேர்த்து வைக்கும் புதிய சட்டம்! | A New Law Force Separated Couples Together Country

அதனால் அந்நாட்டு பெண்கள் இதற்கு எதிராக போராடியும் அதற்குண்டான நீதி கிடைக்கவில்லை. கணவரின் கொடுமை தாங்காமல் ஆப்கானிஸ்தான் பெண்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இதனால் தாலிபான் ஆட்சிக்கு முன் பலரும் விவாகரத்து வாங்கியிருந்தனர். இந்த நிலையில் தாலிபான்கள் விவாகரத்து பெற்ற பெண்கள் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

மேலும் சில தாலிபான்கள் அவர்களை தேடி பிடித்து வழுகட்டாயமாக சேர்த்து வைத்து வருகின்றனர். இதற்கு பயந்து பல பெண்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். இனி விவாகரத்து பெற தடை என சட்டம் கொண்டு வரப்போவதாக தாலிபான்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தாலிபான்கள் செவி சாய்ப்பதேயில்லை. இவ்விடயம் தொடர்பில் அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:- என்னை எனது கணவர் துன்புறுத்தினார்.

அடித்து தாக்கியதில் பற்களை இழந்தேன். இதனால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ ஆரம்பித்தேன். தற்போது விவாகரத்தை ரத்து செய்து மீண்டும் எட்டு குழந்தைகளுடன் கணவரோடு சேர்ந்து வாழ வலியுத்துகின்றனர். இதனால் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளேன்.

தாலிபான்கள் ஆட்சி கொடுமையாக உள்ளது. இவர்களின் ஆட்சியில் தினம் தினம் நான் அழுகிறேன் என அந்நாட்டுப்பெண் கூறியுள்ளார்.