அமெரிக்காவில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையினை 31 வயது பெண் ஏற்றுக் கொண்டதால் அவர் சிறை தண்டனையினை அனுபவிக்கமாட்டார் என்று அந்நாட்டின் நீதிமன்று அறிவித்துள்ளது.
கடந்த வருடம் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா செரானோ(31) என்ற பெண்ணின் மீது 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதனால், ஆண்ட்ரியா செரானோ மீது ஃபவுண்டன் காவல்துறையினர் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர். அதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஆண்ட்ரியா கைது செய்யப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரியாவின் வழக்கறிஞர்கள் எதிர்தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒரு வேண்டுகோள் ஒப்பந்தம் மூலம் ஆண்ட்ரியா தன்னை பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன்போது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமையால் ஆண்ட்ரியா செரானோ கர்ப்பமடைந்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுவனின் தயார் என் மகனின் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டது போல் உணர்வதாகவும் இப்போது அவன் தந்தையாக இருக்க வேண்டும் என்பதுடன் அவனது வாழ்நாள் பலியாகிவிட்டது எனவும் ஊடகம் ஒன்றிற்கு கவலை வெளியிட்டுள்ளார்.