வடகொரியாவில் பாரிய உணவு தட்டுப்பாடு! நாய் இறைச்சி அனுமதி

0
308

வடகொரியாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்நாட்டில் புதிய நாய் இறைச்சி கடைகளுக்கு (Dog Meat Delicacy House) அதிபர் கிம் ஜாங் உன் அனுமதி வழங்கியுள்ளார்.

வெளிநாடொன்றில் பாரிய உணவு தட்டுப்பாடு! நாய் இறைச்சிக்கு அனுமதி | Big Food Shortage On North Korea Dog Meat Allowed

அதிபர் கிம் தலைமையில் நடைபெற்ற விவசாய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நாய் இறைச்சி உணவகம், பியோங்யாங்கில் உள்ள பிரதான நதிக்கரையில் அமைந்துள்ள நன்கு அறியப்பட்ட Okryugwan நூடுல்ஸ் உணவகத்துக்கு அருகில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடொன்றில் பாரிய உணவு தட்டுப்பாடு! நாய் இறைச்சிக்கு அனுமதி | Big Food Shortage On North Korea Dog Meat Allowed

அதிபர் கிம் ஜாங் உன், 2021 இல் அரசு தொலைக்காட்சியில் பேசும் போது புதிய நாய் இறைச்சி உணவகத்தை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவில் தேசிய உணவாக நாய் இறைச்சி கருதப்படுகிறது.

இதற்காக வட கொரியாவில் பல உணவகங்கள் இருக்கும் நிலையில் விலங்கின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தும் சமையல் போட்டிகளும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் பாரிய உணவு தட்டுப்பாடு! நாய் இறைச்சிக்கு அனுமதி | Big Food Shortage On North Korea Dog Meat Allowed