கடல் அலையில் தோன்றியது இங்கிலாந்து மகாராணியா?வைரலாகும் புகைப்படம்!

0
290

பொதுவாகவே சிலருக்கு புகைப்படம் எடுப்பது என்பது கொள்ளைப் பிரியமான ஒரு பொழுதுபோக்கு. எங்கு எதைப் பார்த்தாலும் புகைப்படம் எடுப்பதையும் சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக காலையில் சூரியன் உதயமாகுவதிலிருந்து சூரிய அஸ்தமனம் வரையில் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

அதிலும் இப்போதெல்லாம் ஆளுக்கொரு மொபைல் போனை வைத்துக் கொண்டு எங்கு என்ன நடத்தாலும் செல்பி எடுத்துப் போட்டு விடுவார்கள். அவ்வாறு புகைப்படக்கலைஞர் ஒருவர் ஒரே ஒரு புகைப்படத்திற்காக 12 மணிநேரம் காத்திருந்து புகைப்படம் எடுத்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம், கடல் அலை என்பது சில நேரங்களில் அழகாகவும் சில நேரங்களில் ஆக்ரோசமாகவும் இருக்கும். ஆனால் இந்த அலைகளுக்கு முகம் இருக்கிறது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடல் அலையின் முகம்

கடல் அலையின் முகம்

இங்கிலாந்தின் சண்டெர்லேண்ட் பகுதியில் உள்ள கடற்கரையின் ரோகர் பையர் கலங்கரை விளக்கத்தில் கடல் அலைகள் பாய்ந்து செல்வதைதான் துல்லியமாக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்கலைஞர் இயன் ஸ்ப்ரோட்.

கடல் அலைகள் கலங்கரை விளக்கத்தின் உச்சி வரை சென்று கீழே இறங்கும் போது அதில் ஒரு முகத் தோற்றம் இருப்பதை நுணுக்கமாக படம் படித்து காட்டியிருக்கிறார். இந்தப்புகைப்படம் தொடர்பில் அந்தப் புகைப்படக்கலைஞர் தெரிவித்ததாவது,

கலங்கரை விளக்கத்தில் எழும்பும் அலையில் முகத்தின் வடிவத்தைப் படம்பிடித்தபோது திகைத்துப் போனதாக புகைப்படக் கலைஞர் கூறினார். இயன் ஸ்ப்ரோட் சனிக்கிழமை ரோக்கர் பியரில் 12 மணி நேர படப்பிடிப்பின் போது சுமார் 4,000 படங்களை எடுத்திருக்கிறார்.

கடல் அலையின் முகம்

நார்த் டைன்சைடைச் சேர்ந்த 41 வயதான அவர் இந்த அலையின் முகத்தைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து “அலைகளில் முகங்கள். இது தண்ணீரின் கடவுளாகவும் இருக்கலாம் அல்லது நம் அன்புக்குரிய ராணி எலிசபெத்தாகவும் இருக்கலாம்” என்ற தலைப்பில் புகைப்படத்தைப் பகிர்ந்தபோது அந்தப் புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

புகைப்படம் எடுத்தல் ஒரு பொழுதுபோக்காக தொடங்கப்பட்டதாகவும் “நான் லாக்டவுன் மூலம் மிகவும் சிரமப்பட்டேன், அது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது மற்றும் எனது தொழிலில் நான் மிகவும் அழுத்தமாக இருந்தேன்.

கடல் அலையின் முகம்

“இது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது, நான் இப்போது வேறு நபர்.” என்று தன்னைப் பற்றி பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார் அந்தப் புகைப்படக்கலைஞர்.