சீனாவிடம் பெற்ற நன்கொடை: மொத்தமாக திருப்பிக் கொடுத்த ட்ரூடோ அறக்கட்டளை

0
252

சீனாவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரூடோ அறக்கட்டளை பெற்ற நன்கொடையை திருப்பி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சி தலைவர் ஆன பிறகு சீன அரசு அவர் மீது செல்வாக்கு செலுத்தி வருவதாக பெயர் குறிப்பிடப்படாத தேசிய பாதுகாப்பு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில் சீன அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் அந்த நாட்டின் கோடீஸ்வரர் ஒருவர் 2014 ஆம் ஆண்டில் ட்ரூடோ அறக்கட்டளைக்கு 1 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கினார் எனவும் வெளிப்படுத்தியிருந்தது.

ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி 2016ல் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையை கெளரவிக்கும் நோக்கில் சீன கோடீஸ்வரர் ஒருவர் அவருக்கு 1 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளதாகவும், அத்துடன் ட்ரூடோ அறக்கட்டளைக்கும் நன்கொடை அளித்ததாக அந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ட்ரூடோ அறக்கட்டளையின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் சீனா கோடீஸ்வரரால் அளிக்கப்பட்ட நன்கொடையானது மொத்தமாக (200,000 டொலர்) திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த நன்கொடையையும் நாங்கள் வைத்திருக்க விரும்பவில்லை மற்றும் தெரிந்தே அவ்வாறு செய்யவும் நாங்கள் தயாரல்ல என விளக்கமளித்துள்ளார்.