இங்கிலாந்து நாட்டில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18 ஆக தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 16, 17 வயதுகளை ஒத்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது.

பலரும் வரவேற்பு
இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18 ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வந்துள்ளன.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு எந்த சூழலில் திருமணம் செய்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றம். எனவே, இனி இரு தரப்பு ஒன்று சேர்ந்து 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமண வயதெல்லை மாற்றத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேவேளை 2021 ஆம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்கு கீழ் கட்டாய திருமணம் நடைபெற்றதாகக் கூறி 118 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றது.
16, 17 வயதுகலிலேயே அங்கு திருமணம் நடந்த நிலையில் கடந்தாண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் சட்டத்தை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.