கனடாவில் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட டிக்டாக் நிறுவனம்

0
273

உலகின் முன்னணி சமூக காணொளி ஊடகங்களில் ஒன்றான டிக்டாக் கனடாவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை இந்த நிறுவனம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொடர்பில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கங்களும் விசாரணை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

டிக்டாக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை திரட்டி அதனை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டங்களை டிக்டாக் நிறுவனம் மீறியுள்ளதாக என்பது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையினர் டிக்டாக் பயன்படுத்தும் போது அவர்களது அந்தரங்கத்தன்மை பாதுகாக்கப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எவ்வாறெனினும் இந்த விசாரணைகள் தொடர்பில் டிக்டாக் நிறுவனம் இதுவரையில் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.