மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்க வந்த நபர்.. சிரித்த படியே பிரிந்த உயிர்!

0
101

திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளைக்கு நலக்கு வைத்துள்ள நபர் திடீரென அடுத்த நொடியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தில் உயிரிழந்த நபர்

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணமகனுக்கு திருமண சடங்கு செய்வதற்கு குடும்பத்தினர் ஆயத்தமான தருணத்தில், நபர் ஒருவரும் நலங்கு வைப்பதற்கு வந்துள்ளார்.

இந்த சடங்கு திருமண நிகழ்வின் முக்கிய சடங்காக நடைபெறும். அப்போது மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனிடையே உயிரிழந்தவர் பெயர் ரப்பானி எனவும், அவர் குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை வேலை பார்த்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன