இலங்கையில் 7 மொழிகளில் மொபைல் செயலி அறிமுகம்

0
380

7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸார் செயலியை கண்காணித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

7 மொழிகளைக் கொண்ட கைத்தொலைப்பேசி இலங்கையில் அறிமுகம் | Mobile Introduce 7 Languages Launched In Sri Lanka

மொபைல் செயலி அறிமுகம்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளூர் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ள பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தயாரிப்பு உட்பட சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் அமைச்சர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.