சினிமாவில் இருந்து விலகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்; தீயாய் பரவும் தகவல்..

0
128

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக போற்றப்படுபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

2003ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான நயன்தாரா தமிழில் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

தன் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக மாற்றினார்.

அப்படியே செல்ல செல்ல கவர்ச்சியிலும் இறங்கி பல திரைப்படங்களை தன்வசம் ஆக்கிக் கொண்டார். இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து அவர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாக உயர்ந்தார்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இவர் சினிமாவில் இருக்கும் போது பல சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் கசிந்துக் கொண்டே இருந்ததது. படிப்படியாக சினிமாவில் உயர்ந்த நயன்தாரா கவர்ச்சியை விட்டு விட்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து இந்தக் காதல் கைகூடி கடந்த ஆண்டில் திருமணமும் செய்துக் கொண்டனர்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டு சம்பவத்துக்கும் இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் இருந்தது.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இந்நிலையில், திருமணம் முடிந்தும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இவ்வாறாதொரு நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இனி சினிமாவில் கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விடப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரு மகன்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இது தொடர்பில் இன்னும் நயன்தாரா உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.