பிரிட்டனில் 18 வயது வரை எழுத, படிக்கத் தெரியாதவர் பேராசிரியராகி சாதனை!

0
244

பிரித்தானியாவில் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு 18 வயது வரை எழுதப்படிக்கத் தெரியாத நபர் இன்று சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.

சிறுவயதில் Jason Arday என்ற அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் வாழ்க்கை முழுவதும் யாரோ ஒருவரின் உதவியுடன் தான் அவர் வாழ முடியும் என்று கூறியிருந்தார்கள்.

பிரித்தானியாவில் 18 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாத நபர் செய்த சாதனை! | Read And Write Until The Age Of 18 In Britain

11 வயது வரை சைகை மூலமே உணர்வுகளை வெளிப்படுத்திவந்த Jasonக்கு 18 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாது.

ஆனால் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி கடினமாக உழைந்த Jason அடுத்த மாதம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக இணைய இருக்கிறார்.

படித்து படிப்படியாக உயர்ந்து இன்று இந்த நிலையை Jason அடைந்துள்ளார். அதன்படி 37 வயதில் கருப்பின பேராசிரியர்களிலேயே இளம்வயதுடையவர் என அவர் கருதப்படுகிறார்.

பல்கலையில் மொத்தம் ஐந்து கருப்பினப் பேராசிரியர்கள்தான் உள்ளார்கள். பிரித்தானியாவைப் பொருத்தவரை 23,000 பேராசிரியர்களில் 155 பேர் மட்டுமே கருப்பினப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.