இந்தோனேசியாவில் இலங்கை கோடீஸ்வரர் மரணம்; விசாரணைக்கு செல்லும் CID

0
226

இந்தோனேசியா சுகுசு குடியிருப்பில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் செல்லவுள்ளது.

கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி OMEX ஹோல்டிங்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்க ஜகார்த்தாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

மனைவி, பிள்ளைகள் மாயம்

OMEX ஹோல்டிங்ஸ் குடும்பத்திற்குச் சொந்தமான வணிகம் ஒனேஷின் தந்தை ஆல்பிரட் சுபசிங்கவால் நிறுவப்பட்டது. 45 வயதான அவர் தனது பிரேசிலிய மனைவி, மகள்(4) மற்றும் வீட்டு வேலைக்காரியுடன் ஜகார்த்தாவில் விடுமுறையில் இருந்தார்.

தகவல்களின்படி ஒமேஷின் குடும்பத்திற்கு ஓமேஷின் தொலைபேசிகள் அழைப்புகள் கிடைக்காமையால் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது குடியிருப்பு வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டது.

அங்கு ஒனேஷ் சுபசிங்க சடலமாக கிடந்த நிலையில் உயிரிழந்தவரின் பிரேசிலைச் சேர்ந்த மனைவி, மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.