மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இந்திய அரசியல்வாதி!

0
122

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலை ஆகியோர் நேற்று மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன் போது மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்த இணையமைச்சர் எல். முருகன், கு. அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண இந்திய உதவித் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் ஜெயபாஸ்கரும் கலந்துகொண்டனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இந்திய அரசியல்வாதி!(Photos) | Indian Politician Mannar Thirukkedeeswara Temple

ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் அவர்கள் ஈடுபட்டதோடு இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து மன்னாரில் இலங்கை – இந்திய நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் இடம்பெற்ற மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றனர்.

அதேவேளை கு. அண்ணாமலை கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தம்ை குறிப்பிடத்தக்கது.