திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்கவில்லை; பொலிஸாரிடம் உதவி கோரிய இளைஞர்!

0
96

இந்தியாவில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை என பொலிஸார் தனக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ள  வித்தியாசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எங்கு தேடியும் பெண் கிடைக்கவில்லை என்பதால் தனக்கு உதவி செய்யும்படி பொலிஸில் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் அருகே உள்ள கடாலி பகுதியை சேர்ந்தவர் முகமது டேனிஷ். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இவர் தனது 4 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். தனது தாயுடன் இணைந்து மளிகை கடை ஒன்றையும் டேனிஷ் நடத்திவருகிறார்.

திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்கவில்லை: பொலிஸாரின் உதவியை நாடிய இளைஞர் | No Bride For Marriage Youth Seeks Police Help Up

இந்த நிலையில், டேனிஷிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டினர் முடிவெடுத்திருக்கின்றனர். இதற்காக பல இடங்களில் டேனிஷிற்கு தகுந்தபடி பெண் பார்த்தும் எதுவும் அமையாததால் டேனிஷ் கவலையடைந்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில், இவர் கடாலி காவல்நிலையத்திற்கு சென்று மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்.

திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்கவில்லை: பொலிஸாரின் உதவியை நாடிய இளைஞர் | No Bride For Marriage Youth Seeks Police Help Up

அதில்,”நான் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் தேடினேன். வளர்ச்சி குறைவு என்பதால் எனக்கான பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே பொலிஸார் எனக்கு உதவி செய்யவேண்டும்” என கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் தலால் இது தொடர்பில் பேசுகையில்,

”இது முற்றிலும் வித்தியாசமான கோரிக்கை. இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்” எனக்கூறி இருக்கிறார்.

திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்கவில்லை: பொலிஸாரின் உதவியை நாடிய இளைஞர் | No Bride For Marriage Youth Seeks Police Help Up

முன்னதாக சாம்லி மாவட்டத்தை சேர்ந்த கைராணா பகுதியை சேர்ந்த 27 வயது நிரம்பிய அசீம் மன்சூரி என்பவரும் தனக்கு வளர்ச்சி குறைவு என்பதால் யாருமே பெண்கொடுக்க முன்வரவில்லை எனவும் தனக்கு உதவும்படியும் காவல்துறை மற்றும் முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அசீமுக்கு கடந்த அக்டோபர் 28 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில் டேனிஷ் என்பவரும் இதேபோன்ற கோரிக்கையுடன் பொலிஸாரிடம் மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.