
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே 69 இலட்சம் பேர் வாக்களித்தனர் என்பதை மொட்டுக் கட்சியினர் மறந்துவிடக்கூடாது. எனவே,13 ஐ அமுல்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் தேரர் எச்சரித்தார்.
