நாய் தாக்கி உதடுகளை இழந்த மாடல் அழகி பகிர்ந்த புகைப்படங்கள்!

0
274

அமெரிக்காவில் நாய் தாக்கியதில் உதடுகளை இழந்த புரூக்லின் கௌரி என்ற 23 வயது மாடல் அழகி தனது மாற்றத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மடால் அழகியான புரூக்லின் கோவ்ரி தனது உறவினர் மற்றும் அவரது பிட் புல் நாயுடன் வெளியே சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமான அந்த நாய் அவரைத் தாக்கியது. நாய் தாக்கியதில் புரூக்லின் தனது மேல் உதட்டை இழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

அவரது சிரிப்பை மீண்டும் கொண்டுவர அவருக்கு உதடு பகுதியில் ஆறு அறுவைச்சிச்சைகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் தனது மாற்றத்தைக் காட்ட இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான முன்னேற்றப் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், முதல் படம், நாய் தாக்கியதில் அவரது மேல் உதடு இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.

இரண்டாவது படத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் உதடு சீரான நிலையில் இருப்பதை காட்டுகிறது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்ததுடன் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறினார்.