நேற்றையதினம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் உலகையே உலுக்கி உள்ளது. முக்கியமாக துருக்கி நிலநடுக்கம் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுவரை 4000 அதிகமானோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் 20 ஆயிரம் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ள நிலையில் 4000 பேர் சிரியாவில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
7 ஆயிரம் கட்டிடங்கள் துருக்கியில் இடிந்து விழுந்து உள்ளன. சிரியாவில் 3 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிடங்கள், நேற்று காலை முதல் நிலநடுக்கம் 7.8 ரிக்டரில் பதிவாகி இருக்கிறது.

துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் மாலையில் ஏற்பட்டது.
தொடர் நிலநடுக்கங்கள்
இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. பின்னர் சில மணி நேரங்களில் மூன்றாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானது.

முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே இரண்டாவது நிலநடுக்கம் மற்றும் மூன்றாவது அதே பகுதியில் ஏற்பட்டு உள்ளமை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏன் இவ்வளவு கடுமையாக இருந்தது?
இந்த நிலநடுக்கம் ஏன் இவ்வளவு கடுமையாக இருந்தது ஏன் இத்தனை உயிர்களை பலி கொண்டது? காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது.

மூன்று நிலநடுக்கமும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில்தான் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் மட்டுமின்றி, அதன்பின் நடக்கும் சிறிய சிறியப் நடுக்கங்களும் இங்கே ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஆப்டர் எபெக்ட் எனப்படும் தாக்கங்களும் இங்கே ஏற்பட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது.
அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன. பால்ட் லைன் என்பதை எளிதாக விளக்க முடியும். தரையில் ஒரு 100 கிமீக்கு நேர்கோடு போடுங்கள்.
இப்போது கோட்டிற்கு இந்த பக்கம் இருக்கும் பகுதி வடக்கு திசையிலும், அந்த பக்கம் இருக்கும் பகுதி அதற்கு எதிர் திசையிலும் சென்றால் எப்படி இருக்கும்? கைகளை நாம் சூடு செய்வதற்காக முன்னும், பின்னும் தேய்ப்பது போல தேய்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இங்கே 100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது.

அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது. இதைவிட அங்கே பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தாலும், நேரடியாக இந்த அளவிற்கு அவை பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த அளவிற்கு அடுக்குகள் மோதிக்கொள்ளவில்லை.
அதிகாலையில் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்ததும் இந்த நிலநடுக்கம் அதிக சேதங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்டது.
எதனால் ஏற்பட்டது?
பூமி என்பதே பல அடுக்குகளை கொண்ட கோளம்தான். உதாரணமாக சாண்ட் விச்சில் இருப்பது போல இதில் அடுக்கடுக்காக இருக்கும். இதை அடுக்குகள், பிளேட்கள் என்று கூறுவார்கள்.

இவை அடிக்கடி நகர முயற்சி செய்யும். ஆனால் இறுக்கமாக ஒன்றுடன் ஒன்று இருப்பதால் அடுக்குகள் நகராமல் தடுக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல திடீரென ஒரு பிளேட் மட்டும் அதிக பலம் பெற்று.. அதிக அழுத்தம் காரணமாக சட்டென நகரும்.
இந்த நகர்தல்தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்து உள்ளது.
தொடர் நிலநடுக்கம்,
அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.

இப்படி எல்லாம் சேர்ந்து அடுத்தடுத்து தாக்கிய காரணத்தால்இதன் காரணமாகவே விஷயம் , 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கமும் தரை பகுதிக்கு கீழே ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்டு இருந்தால் அது மிகப்பெரிய சுனாமியை கூட ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இந்த முறை அங்கு சுனாமி ஏற்படவில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நினைவிடம் அழிவு
ரோம் காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நினைவிடம் ஒன்றும் கூட இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்துள்ளது. துருக்கி அருகே இருக்கும் சிரியா, எகிப்த், சைப்ரஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

சிரியா எல்லையோர நகரங்கள், துருக்கியில் 10க்கும் மேற்பட்ட நகரங்கள் மொத்தமாக இந்த நிலநடுக்கத்தால் முடங்கி போய் உள்ளது. சிரியாவில் 470 பேர் இதுவரை அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம் அதிகமாக ஏற்பட கூடிய இடம் ஆகும். யூரேசிய தட்டு மற்றும் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய தட்டுகள் எல்லாம் ஒரு இடத்தில் சந்திக்கும் பகுதிதான் துருக்கி. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.