இன்று மூன்று நீதியரசர்கள் பதவி பிரமாணம்!

0
132

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் இன்று (06) காலை பதவியேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

மூன்று நீதியரசர்கள் இன்று பதவியேற்பு!(Photos) | Three Justices Sworn In Today
மூன்று நீதியரசர்கள் இன்று பதவியேற்பு!(Photos) | Three Justices Sworn In Today
மூன்று நீதியரசர்கள் இன்று பதவியேற்பு!(Photos) | Three Justices Sworn In Today