சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொடவிற்கு பிணை

0
118

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட நேற்றிரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கைதான அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிவான் உத்தரவில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஹந்துன்கொடவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைத்தனர். எனினும் அவர் வாக்குமூலம் அளிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதேநேரம் தொழில் ரீதியாக தர்ஷன ஹந்துன்கொட ஓர் ஊடகவியலாளர் ஆவார்.