இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழர்கள் அனுஸ்டித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் முல்லைத்தீவு நகர் சுற்றுவட்டம் பொதுச் சந்தை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கட்டப்பட்டிருந்தன.

விசமிகளின் செயல்
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் து. ரவிகரன் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்தப் பதாகை கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது சில விசமிகளின் செயல் எனக்கூறிய தமிழரசு கட்சியின் தொண்டர்கள் குறித்த பதாகையை அகற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.