ஹரி- மேகன் தம்பதியின் அதிரடி திட்டம்… இந்த முறை கடுமையாக இருக்கலாம்

0
125

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதி இன்னொரு Netflix தொடருக்கு தயாராகி வருவதாகவும், ஆனால் இந்த முறை தங்களது வாழ்க்கை தொடர்பிலானதாக இருக்காது எனவும் தகவல் கசிந்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும்

ஹரி – மேகன் தம்பதி மீண்டும் ஒரு Netflix தொடருடன் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையிலான படைப்புடன் களமிறங்க உள்ளனர்.

மட்டுமின்றி, கற்பனை கதைகளின் பின்னணியில் புதிய படைப்பு இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும், தேவையில்லாத ஊடக வெளிச்சம் அவர்கள் மீது திரும்புவதில் இருந்து விலகி இருக்கவும் புதிய முயற்சி உதிவும் என அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

அத்துடன் புதிய தொடரினை ஹரி- மேகன் தம்பதி Netflix நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். ஜனவரி 10ம் திகதி பல மொழிகளில் வெளியான ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூலானது விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

விவாதத்தை ஏற்படுத்திய தகவல்கள்

குறித்த நூலில் தனிப்பட்ட பல தகவல்களை ஹரி பகிர்ந்து கொண்டுள்ளதுடன், அந்த நூலில் இடம்பெற்ற பல தகவல்கள் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ஹரி- மேகன் தம்பதியின் அடுத்த அதிரடி திட்டம்... இந்த முறை கடுமையாக இருக்கும் என சூசகம் | Harry Meghan Plans For Another Netflix Series

இதனிடையே, மேகன் தமது Spotify podcast தொடரில் டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவின் முதல் பெண்மணி சோஃபி ட்ரூடோ ஆகியோர்களை கலந்துகொள்ள வைத்து கவனத்தை ஈர்த்தார்.