திட்டிக்கொண்டே இருந்த முதலாளியை ஆத்திரத்தில் கொலை செய்த காவலாளி!

0
292

தாய்லாந்தில் காவலாளி ஒருவர் தனது முதலாளியை நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

தாய்லாந்தில் நிறுவனம் ஒன்றின் காவலாளியை நாளாந்தம் திட்டித் தீர்த்து வந்ததால் குறித்த காவலாளி முதலாளிக்கு கத்தியால் குத்தியுள்ளார்.

திட்டிக்கொண்டே இருந்த முதலாளியை ஆத்திரத்தில் கொலை செய்த காவலாளி! | The Guard Killed The Boss Kept Scolding Him Rage

சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் பனன் என்ற 56 வயதுடையவரின் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சாவத்திடம் அரோம் எப்போதும் கண்டிப்புடனும் கடுமையான சொற்களை கொண்டு நடத்தி வந்து வந்திருக்கிறார். பல மணித்தியாலம் வேலையும் பார்க்க வைத்திருக்கிறார். அவ்வப்போது வசைப்பாடுவதையும் அரோம் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சாவத்தின் மனதில் ஆழமாக பதிந்துப்போக ஒரு கட்டத்தில் தனது முதலாளி ஆரோமின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தியிருக்கிறார்.

திட்டிக்கொண்டே இருந்த முதலாளியை ஆத்திரத்தில் கொலை செய்த காவலாளி! | The Guard Killed The Boss Kept Scolding Him Rage

இது தொடர்பில் தகவலிறிந்து சென்ற தாய்லாந்து பொலிஸார் சாவத்தை கைது செய்தனர்.

பொலிஸாரின் விசாரணையில் சாவத் கூறியதாவது,

ரொம்ப நாளாகவே என் முதலாளி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தேன். வீட்டுக்கு சென்றால் கூட ஆரோம் என்னை எப்போதும் திட்டுவதும், என்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டதுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

இதனால் என்னால் தூங்க முடியாமல் போனது. அவர் என்னை கொடுமைப்படுத்தியதால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன் என்றார்.

திட்டிக்கொண்டே இருந்த முதலாளியை ஆத்திரத்தில் கொலை செய்த காவலாளி! | The Guard Killed The Boss Kept Scolding Him Rage

இச் சம்பவம் நேற்று (01-02-2023) பாங்காக்கின் லம்பினி பூங்காவில் நடந்திருக்கிறது. குறித்த சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில், சாவத்திடம் ஆரோம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிய போதும் அவர் மீதான ஆத்திரத்தில் கருணையே இல்லாமல் ஆரோமின் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு சாவத் சைக்கிளில் சென்றது பதிவாகியிருக்கிறது.

நெஞ்சின் இடப்பக்கத்தில் கத்திக்குத்து வாங்கிய ஆரோமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸாரின் பிடியில் இருக்கும் சாவத் கொன்றது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என பொலிஸார் கூறியுள்ளார்கள்.