50 மாணவிகளுக்கு நடுவே சிக்கிய மாணவன்! இறுதியில் சேர்ந்த அவலம் (video)

0
106

மாணவர் ஒருவர் 50 மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து தேர்வு எழுத சென்ற தருணத்தில் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு மத்தியில் மாணவன்

பொதுவாக தேர்வு என்றாலே அனைவருக்கும் மனதில் ஒரு கலக்கமும், பயமும் நிச்சயமாகவே இருக்கும். பீகார் மாநிலத்தில் மாணவன் ஒருவன் மாணவிகளுக்கு மத்தியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.

ஆம் பீகார் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய நிலையில், நாளந்தா மாவட்டத்தில் ஷெரிப் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மனிஷ் ஷங்கர் பிரசாத் எனும் மாணவர் பொதுத் தேர்வு எழுத சென்றுள்ளார்.

கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர் தேர்வு எழுத தொடங்கிய போது, திடீரென மனிஷ் மட்டும் மயக்கமிட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனே அங்கிருந்த அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில மணி நேரத்தில் சரியான மணிஷ்ஷிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆம் தேர்வு மையத்தில் 50 மாணவிகள் இருந்த நிலையில், அவர்களின் மத்தியில் மனிஷ் மட்டும் இருந்து தேர்வு எழுத வந்ததால், அதில் ஏற்பட்ட பதற்றத்தில் மயங்கிவிழுந்துள்ளதாக கூறியுள்ளார்.