அணிவகுப்பில் பங்கேற்ற 4 வயது சிறுவன்: பள்ளி மீது தாய் வழக்கு!

0
267

பிரிட்டனில் பாடசாலை ஒன்று முன்னெடுத்த ஓரினசேர்க்கையாளர்களுக்கான அணிவகுப்பில் தமது 4 வயது மகனை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைத்துள்ளதாக கூறி தாயார் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறித்த நிகழ்வானது கொடிய பாவங்களில் மிகக் கடுமையானது எனவும் அந்த 28 வயது தாயார் Izzy Montag நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனின் ஹீவர்ஸ் பண்ணை ஆரம்ப பள்ளியானது அங்குள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு 2018 ஜூன் 19ம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான அணிவகுப்பில் தங்கள் பிள்ளைகளை பங்கேற்க அனுமதிக்கும்படி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட Izzy Montag தமது 4 வயது மகன் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ள போவதில்லை என பதிலளித்தார்.

இருப்பினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் Izzy Montag இன்னொரு நீண்ட விளக்கமளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்களே இவ்வாறான நடத்தையில் ஈடுபடுவார்கள் எனவும் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட தம்மால் இதை ஏற்க முடியாது எனவும் இது பாவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஹீவர்ஸ் பண்ணை ஆரம்ப பள்ளியானது குறித்த நிகழ்வை ஆதரித்ததுடன் சிறார்களில் சக மனிதர்கள் மீதான ஏற்றத்தாழ்வை இது போக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.